search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொருட்கள் கொள்ளை"

    • கோடியக்கரை 7 கடல் மைல் தொலைவில் நடுக்கடலில் மீனவர்கள் 5 பேரும் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
    • கொடூர தாக்குதலில் மீனவர் ராமன் உள்ளிட்ட 5 பேரும் காயமடைந்தனர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள ஆறுக்காட்டுறையில் இருந்து மீனவர்கள் ராமன் (வயது 51), ரமேஷ் (28), சிவக்குமார்(41) ஆகியோர் ஒரு பைபர் படகிலும், பொன்னுத்துரை (51), ஜெயசந்திரன் (40) ஆகியோர் மற்றொரு பைபர் படகு என 2 படகுகளில் நேற்று மாலை மீன்பிடிக்க புறப்பட்டனர்.

    இன்று அதிகாலை கோடியக்கரை 7 கடல் மைல் தொலைவில் நடுக்கடலில் மீனவர்கள் 5 பேரும் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் அத்துமீறி மீனவர்களின் 2 படகுகளிலும் ஏறினர். பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் மீனவர்களை கத்தியால் குத்தி ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள மீன், நண்டு, ஜி.பி.எஸ் கருவி, செல்போன் உள்ளிட்ட பொருட்களை கொள்ளை அடித்து அங்கிருந்து தப்பினர்.

    இந்த கொடூர தாக்குதலில் மீனவர் ராமன் உள்ளிட்ட 5 பேரும் காயமடைந்தனர். இதையடுத்து வேக வேகமாக கரைக்கு திரும்பிய அவர்கள் 5 பேரும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்ந்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் கடலோர காவல் குழும போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இலங்கை கடற்கொள்ளையர்கள் அத்துமீறி இந்திய கடல்பகுதிக்குள் நுழைந்து தமிழக மீனவர்களை தாக்கி பொருட்களை கொள்ளையடித்து செல்லும் சம்பவம் அதிகரித்து வருவதால் மீனவர்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.

    எனவே இலங்கை கடற்கொள்ளையர்களின் அட்டூழியத்திற்கு முற்றுபுள்ளி வைத்து கடலில் அச்சமின்றி மீன் பிடிக்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பூட்டை உடைத்து மர்ம நபர்கள் துணிகரம்
    • ரூ.50 ஆயிரம் ரொக்கப் பணம், மற்றும் ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள கை கடிகாரம்

    இரணியல் :

    இரணியல் அருகே உள்ள நுள்ளிவிளையை சேர்ந்தவர் மாடசாமி. இவரது மகன் கார்த்திக் (வயது 32). இவர் பெங்களூரூவில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார்.

    பெற்றோர் இறந்து விட்டதால் வீட்டில் கார்த்திக் தனியாக வசித்து வந்தார். கடந்த மாதம் 9-ந் தேதி அவர் வீட்டை பூட்டி விட்டு பெங்களூர் சென்று விட்டார். தீபாவளி பண்டிகையை கொண்டாட கார்த்திக் சம்பவத்தன்று ஊருக்கு வந்தார்.

    வீட்டின் முன் கதவை திறந்து உள்ளே சென்ற அவர், அங்கு பொருட்கள் சிதறி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் பின்பக்க கதவு திறந்து கிடந்தது. அந்த கதவின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்திருப்பதும் தெரிய வந்தது. வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அதிலிருந்த ரூ.50 ஆயிரம் ரொக்கப் பணம், மற்றும் ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள கை கடிகாரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பதாக இரணியல் போலீஸ் நிலையத்தில் கார்த்திக் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சம்பவத்தன்று இரவு தனது வீட்டைபூட்டிவிட்டு மனைவியுடன் அருகில் உள்ள சகோதரர் வீட்டில் தூங்கசென்றார்.
    • அறையில் இருந்த பித்தளை அண்டா, பானை, குத்துவிளக்கு, சிலிண்டர் உள்ளிட்ட பொருட்களையும், ரூ.4500 பணத்தையும் மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது

    தேனி:

    தேனி அருகே அல்லி நகரத்தை சேர்ந்தவர் செல்வம்(51). இவர் பொம்மை விற்பனை செய்து வருகிறார். சம்பவத்தன்று இரவு தனது வீட்டைபூட்டிவிட்டு மனைவியுடன் அருகில் உள்ள சகோதரர் வீட்டில் தூங்கசென்றார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்ப ட்டிருந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த செல்வம் உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் சிதறிகிடந்தது. அறையில் இருந்த பித்தளை அண்டா, பானை, குத்துவிளக்கு, சிலிண்டர் உள்ளிட்ட பொருட்களையும், ரூ.4500 பணத்தையும் மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அல்லிநகரம் போலீசில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    • கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி–யடைந்தார்.
    • கால் கொலுசு, அருணாகொடி, கை காப்பு, கால் காப்பு என 7 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை யடித்து சென்றனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் பாப்பராப்பட்டியைச் சேர்ந்தவர் சீனிவாசன். அவரது மனைவி மைதிலி. இவர் பாப்பாரப்பட்டியில் உள்ள கடைவீதியில் வெள்ளி நகை கடை நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் மைதிலி கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். நேற்று காலை மீண்டும் கடையை திறக்க வந்து பார்த்தபோது அங்கு கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி–யடைந்தார்.

    உடனே உள்ளே சென்று பார்த்தபோது கால் கொலுசு, அருணாகொடி, கை காப்பு, கால் காப்பு என 7 கிலோ வெள்ளி பொருட்கள் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து மைதிலி பாப்பாரப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். உடனே போலீசார் அங்கு விரைந்து வந்து கொள்ளை நடந்த நகை கடையை பார்வையிட்டனர். இதனிடையே மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிராக்களில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாயகண்ணன் வீட்டை பூட்டி விட்டு தனது மனைவியின் தாய் வீட்டுக்கு தொண்டாமுத்தூர் சென்றார்.
    • போலீசார் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    பீளமேடு,

    கோவை விளாங்குறிச்சி ரோடு குமுதம் நகரை சேர்ந்தவர் மாயகண்ணன் (வயது 57). தொழில் அதிபர். இவரது மனைவி செல்வநாயகி (53).

    சம்பவத்தன்று மாயகண்ணன் வீட்டை பூட்டி விட்டு தனது மனைவியின் தாய் வீட்டுக்கு தொண்டாமுத்தூர் சென்றார். அப்போது அவர்களது பக்கத்து வீட்டை சேர்ந்த ஒருவர் செல்வநாயகிக்கு போன் செய்து வீட்டின் ஜன்னல் கதவு உடைக்கப்பட்டு இருப்பதாக கூறினார்.

    உடனே செல்வநாயகி வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முதல் மாடியில் உள்ள முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்த போது, அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த 40 பவுன் தங்க நகைகள், 1½ கிலோ வெள்ளி பொருட்கள், 12 கை கடிகாரம், ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்து.

    இதுகுறித்து செல்வநாயகி பீளமேடு போலீசில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் அவரது வீட்டுக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகிருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.

    மேலும் போலீசார் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடு புகுந்து கொள்ளையடித்த திருடர்களை தேடி வருகின்றனர்.தொழில் அதிபர் வீட்டில் 40 பவுன் தங்க நகைகள், 1½ கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு போனது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
    • சொந்த பணியின் காரணமாக ஆனைகட்டி சென்றார்.

    கோவை

    கேரளா மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்தவர் அபுமோகராஜ் (வயது 34). இவர் கோவை பீளமேடு ஆவாரம்பாளையம் இளங்கோ நகரில் போட்டோ ஸ்டுடியோ நடத்தி வருகிறார்.

    அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த பணியின் காரணமாக ஆனைகட்டி சென்றார். இதனால் ஸ்டூடியோவில் வேலை செய்து வரும் ஸ்டிபன்ராஜ் என்பவர் கடையை கவனித்து வந்தார்.சம்பவத்தன்று வழக்கம் போல ஸ்டிபன்ராஜ் ஸ்டூடி யோவில் வேலைகளை முடித்து விட்டு கடையை பூட்டி சென்றார். மறுநாள் காலை ஸ்டூடியோவில் திறக்க அவர் சென்றார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த ரூ.15 லட்சம் மதிப்பிலான கம்பீயூட்டர் உள்பட பல பொருட்கள் திருட்டு போயிருந்தது. இதுகுறித்து அவர் அபுமோகராஜூக்கு தகவல் தெரிவித்தார்.அவர் உடனே கோவை திரும்பினார். பின்னர் பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.இதையடுத்து அபுமோகராஜ் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி காமிராக்களை ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    • கஞ்சா மற்றும் மதுவுக்கு அடிமையான வாலிபர்கள் பொதுமக்களை மிரட்டுவதும், பூட்டி இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடித்து செல்வதும் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
    • பீரோவில் இருந்த ரூ.15 ஆயிரம் பணம், செல்போன், டி.வி. உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள் திருடு போயிருந்தன

    கம்பம்:

    தேனி மாவட்டம் கம்பம் ஓடைக்கரைத் தெருவைச் சேர்ந்தவர் சாகுல் அமீது. இவர் செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று உறவினர் வீட்டு விசேஷத்துக்காக சென்று விட்டு இரவில் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த ரூ.15 ஆயிரம் பணம், செல்போன், டி.வி. உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள் திருடு போயிருந்தன. இது குறித்து கம்பம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கம்பம் நகரில் போதை ஆசாமிகளின் தொல்லை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. கஞ்சா மற்றும் மதுவுக்கு அடிமையான வாலிபர்கள் பொதுமக்களை மிரட்டுவதும், பூட்டி இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடித்து செல்வதும் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

    நேற்று இரவு வியாபாரி போதை வாலிபர்களால் படுகொலை செய்யப்பட்ட நிலையில் கம்பம் நகரில் வீட்டில் கொள்ளை நடந்தது பொதுமக்களை அச்சமடைய வைத்துள்ளது. எனவே போலீசார் இரவு ேநர ரோந்து பணியை தீவிரபடுத்த வேண்டும். தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் அதிகரிக்கும் கொலை, கொள்ளை சம்பவங்களால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலைக்கு ஆளாகியுள்ளனர்.

    பழைய குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைப்பதுடன் போதை வாலிபர்களையும் இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    வடசேரி அருகே வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.

    நாகர்கோவில்:

    வடசேரியை அடுத்த ஆலம்பாறை கிரேஸ் தெரு பகுதியை சேர்ந்தவர் ராஜகோபால கிருஷ்ணன் (வயது 37).

    இவரது மனைவி பிரசவத்திற்காக கடந்த சில நாட்களுக்கு முன் தாயார் வீட்டிற்கு சென்று இருந்தார். மனைவியை பார்ப்பதற்காக ராஜகோபால கிருஷ்ணனும் வீட்டை பூட்டிவிட்டு அங்கு சென்றார். வீட்டில் யாரும் இல்லை.

    இந்த நிலையில் நேற்று காலை வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டு வீடு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து வடசேரி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு சப்-இன்ஸ்பெக்டர் அனில்குமார், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் சங்கரகுமார் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர்.

    வீட்டினுள் சென்று பார்க்கும்போது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்களும் சிதறிக் கிடந்தது. மேலும் வீட்டில் இருந்த வெள்ளி விளக்கு ஒன்று, தம்ளர்-1, கப்பு-4 மற்றும் விலை உயர்ந்த காமிரா-1, டி.வி.டி. பிளேயர்-1, வாட்ச்-1 ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது.

    மேலும் கைரேகை நிபுணர்களும் அங்கு வந்தனர். அவர்கள் பூட்டு உடைக்கப்பட்ட இடம், பீரோ ஆகிய இடங்களில் கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். இதில் கொள்ளையரின் கைரேகை சிக்கியது.

    இந்த கைரேகைகளை கொண்டு போலீசார் பழைய கொள்ளையர்களின் கைரேகைகளுடன் ஒப்பிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் குறித்து வடசேரி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆள் இல்லாததை நோட்டமிட்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதால், உள்ளூர் கொள்ளையர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருப்பார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×